வேறொரு பெண்ணுடன் பழகியதை தட்டி கேட்டதால் மாணவியை கொலை செய்தேன்


வேறொரு பெண்ணுடன் பழகியதை தட்டி கேட்டதால் மாணவியை கொலை செய்தேன்
x

வந்தவாசி அருகே வேறொரு பெண்ணுடன் பழகியதை தட்டி கேட்டதால் மாணவியை கொலை செய்தேன் என்று வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசி அருகே வேறொரு பெண்ணுடன் பழகியதை தட்டி கேட்டதால் மாணவியை கொலை செய்தேன் என்று வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மாணவி கொலை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தைச் சேர்ந்த மாரியின் மகள் ரேணுகா (வயது 14), அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 23-ந் தேதி பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறி சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து வந்தவாசி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் மாணவியை தேடி வந்தனர். அப்போது மாணவியை துப்பட்டாவில் கழுத்தை இறுக்கி கொலை செய்து முட்புதரில் வீசி இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் பிணத்ைத மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து வந்தவாசி துணை சூப்பிரண்டு கார்த்திக் தலைமையில் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமு, தட்சிணாமூர்த்தி ஆகியோர் கொண்ட தனிப்படையினர் கொலையாளியை தேடி வந்தனர்.

வாலிபர் கைது

விசாரணையில் மாணவியின் தாயின் செல்போனுக்கு கடந்த 23-ந் தேதி சென்னையில் இருந்து பேசுவதாக கூறி வாலிபர் ஒருவர் உங்கள் மகள் வீட்டுக்கு வந்து விட்டாரா என கேட்டது தெரியவந்தது.

அந்த செல்போன் எண்ணை வைத்து நடத்திய விசாரணையில் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்யும் சென்னாவரம் கிராமத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன் (21) என்பவர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து வந்தவாசி புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு தப்பிச்செல்ல இருந்த யோகேஸ்வரனை போலீசார் பிடித்து கைது செய்தனர்.

வாக்குமூலம்

அப்போது அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-

பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி யோகேஸ்வரன் ஆசைவார்த்தை கூறி உள்ளார். பின்னர் மாணவியை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார்.

இதற்கிடையில் மற்றொரு பெண்ணுடன் யோகேஸ்வரன் பழகி அந்த பெண்ணுடன் ஊர் சுற்றுவதை அறிந்த மாணவி ரேணுகா தட்டி கேட்டுள்ளார். மேலும் தன்னிடம் பழகியதையும், பலாத்காரம் செய்ததையும் போலீசில் கூறுவதாக மாணவி கூறினார். இதனால் மாணவியை தீர்த்துக்கட்ட முடிவு அவர் செய்தார்.

அதன்படி யோகேஸ்வரன் 23-ந் தேதி சென்னையில் இருந்து வந்து மாணவியிடம் மன்னிப்பு கேட்பதாக கூறி அழைத்துள்ளார் அதை நம்பி சென்ற மாணவியை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்து முட்பதரில் பிணத்தை வீசி உள்ளார்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் யோகஸே்வரனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story