'நான் மீண்டும் சிதம்பரத்தில்தான் போட்டியிடுவேன்' திருமாவளவன் எம்.பி. சொல்கிறார்

நான் மீண்டும் சிதம்பரத்தில்தான் போட்டியிடுவேன் திருமாவளவன் எம்.பி. சொல்கிறார்
x

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மீண்டும் நான் சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிடுவேன். இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. நடராஜர் கோவிலில் நடக்கும் பிரச்சினைக்கு அரசும், சட்டமும் சொல்வதற்கு தீட்சிதர்கள் ஒத்துழைப்பு தந்து பிரச்சினையை தீர்த்துக்கொள்ள வேண்டும். திரைத்துறையில் நடித்து வருபவர்களை முதல்-அமைச்சராக தேடும் நிலை தமிழகத்தில் மட்டும் தான் உள்ளது. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை யூகமாக எழுதி வரும் நிலையில், இதை நான் எதிர்க்கவில்லை வரவேற்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story