அதிமுகவின் உண்மை தொண்டர்களை விரைவில் சந்திப்பேன் - ஓ.பன்னீர் செல்வம்


அதிமுகவின் உண்மை தொண்டர்களை விரைவில் சந்திப்பேன் - ஓ.பன்னீர் செல்வம்
x

அதிமகவின் உண்மை தொண்டர்களை விரைவில் சந்திப்பேன் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க.வின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம் நியமித்தார். அவர் நியமித்த ஒரு மணி நேரத்தில் அவரை கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்த நிலையில் சென்னை அசோக் நகரில் பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், கு.ப. கிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அ.தி.மு.க.வில் பயணித்த மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரனின் அனுபவங்களை ஆலோசனைகளாக பெற்றோம்.

விரைவில் அ.தி.மு.க.வின் உண்மையான தொண்டர்கள், ஜெயலலிதாவுடன் பயணித்தவர்களை சந்திப்பேன். பொறுத்திருந்து பாருங்கள் என கூறினார்.

மேலும், அ.தி.மு.க.வில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அதனை எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும் என கூறினார்.


Next Story