உங்களில் ஒருவனாக பணியாற்றுவேன் - எடப்பாடி பழனிசாமி டுவீட்


உங்களில் ஒருவனாக பணியாற்றுவேன் - எடப்பாடி பழனிசாமி டுவீட்
x

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு மூலம் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டிற்குள் முழுமையாக வந்துள்ளது.

சென்னை,

அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் . இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுத்தது செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு மூலம் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டிற்குள் முழுமையாக வந்துள்ளது.அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யபப்ட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை உறுதி செய்தும், ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டது.

இந்த் நிலையில் நியாயத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

வரலாற்று சிறப்பு மிக்க உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு நியாயத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி,புரட்சித்தலைவர் "எம்ஜிஆர்", புரட்சிதலைவி "அம்மா"ஆகிய இருபெறும் தலைவர்களின் நல் ஆசியுடனும்,ஒன்னரை கோடி தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவுடனும்,கழகத்தை வழிநடத்தவும்.

அம்மா அவர்கள் கண்ட நூறாண்டு சரித்திரக் கனவை நனவாக்கவும் உயிர் மூச்சுள்ளவரை உங்களில் ஒருவனாக பணியாற்றுவேன்.


Next Story