சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்


சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
x

அரவக்குறிச்சியில் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

கரூர்

போக்குவரத்து நெரிசல்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் உள்ள கரூர் சாலை, பள்ளப்பட்டி செல்லும் மெயின் சாலை, தாராபுரம் சாலை ஆகிய பகுதிகள் எப்ேபாதும் அதிக அளவு வாகனங்கள் சென்றுவரும் பகுதியாகும். இப்பகுதிகளில் தினமும் கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை சாலையின் ஓரத்திலேயே நிறுத்தி விட்டு சென்று விடுகிறார்கள். இதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது.

நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் அரவக்குறிச்சி-பள்ளப்பட்டி செல்லும் மெயின் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அதிக அளவு நிறுத்தி இருந்தனர். இதனால் அந்த வழியாக பஸ்கள், லாரிகள், கார், வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வாகன ஓட்டிகள் அவதி

இதேபோல் தாராபுரம் சாலையில் இருந்து ஒரு லாரியும், பள்ளி பஸ்சும் பள்ளப்பட்டி சாலையில் திரும்பும்போது சாலையின் ஓரங்களில் நிறைய வாகனங்கள் நிறுத்தி இருந்ததால் அடுத்த வாகனங்கள் செல்ல முடியாமல் நின்றது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த பிரச்சினைகளால் அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முதல் தாராபுரம் சாலையில் உள்ள போலீஸ் நிலையம் வரை வாகனங்கள் சவாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இது பற்றி தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரமாக நின்றிருந்த வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.


Next Story