மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
தேவகோட்டை,
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வட்டார வள மையம் பள்ளிக்கல்வி துறையின் சார்பில் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் தேவகோட்டை யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது. யூனியன் தலைவர் பிர்லா கணேசன் தலைமை தாங்கினார். இதில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகம் சார்பாக தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதை யூனியன் தலைவர் பிர்லாகணேசன் வழங்கினார்.இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை மற்றும் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது. மேலும் சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்தனர்.இதில் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் கதிர்வேல், யூனியன் ஆணையாளர் மாலதி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதர், தாசில்தார் ரத்தினவேல் பாண்டியன், வட்டார கல்வி அலுவலர்கள் மாலதி, லட்சுமி தேவி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.