மாதந்தோறும் 1, 3-வது செவ்வாய்க்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம்
திருப்பத்தூர் மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தில் மாந்தோறும் 1, 3-வது செவ்வாய்க்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்க மறுமதிப்பீடு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தில் மாந்தோறும் 1, 3-வது செவ்வாய்க்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்க மறுமதிப்பீடு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்று வந்தது.
இனி இந்த முாமானது புதிய கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மக்கள் குறைதீர் கூட்ட அரங்கில் ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்கிழமை மற்றும் மூன்றாவது செவ்வாய்கிழமைகளில் தொடர்ந்து நடைபெறவுள்ளது. புதிய தேசிய அடையாள அட்டை பெற விரும்பும் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.