மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை


மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை
x

ராணிப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டையை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி நலத்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை இணைந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாமை நடத்தியது.

கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, 77 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளையும், மாதாந்திர பராமரிப்பு நிதியுதவி 18 பேருக்கும் வழங்கி பேசினார்.

முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story