மாயமான சிலைகள் குறித்து புலன்விசாரணை செய்தால் உண்மை வெளிப்படும்
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மாயமான சிலைகள் குறித்து புலன்விசாரணை செய்தால் உண்மை வெளிப்படும் என்று ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி. பொன்மாணிக்கவேல் கூறினார்.
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மாயமான சிலைகள் குறித்து புலன்விசாரணை செய்தால் உண்மை வெளிப்படும் என்று ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி. பொன்மாணிக்கவேல் கூறினார்.
உழவாரப்பணி
திருவாரூர் தியாகராஜர் கோவில் உலக சிவனடியார் திருக்கூட்டத்தின் சார்பில் உழவாரப்பணி நேற்று தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. உழவாரப்பணியை உலக சிவனடியார் திருக்கூட்டமைப்பின் மாநில தலைமை ஆலோசகரும், ஒய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பியுமான பொன் மாணிக்கவேல் தொடங்கி வைத்தார்.அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-திருவாரூர் தியாகராஜர் கோவில் சிலைகள் காப்பகங்களில் 5ஆயிரத்து 90 சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இதில் 813 சிலைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. ஆய்வில் 193 சிலைகள் போலியானவை என கண்டுபிடிக்கப்பட்டது. ஐம்பொன் சிலைகளை மாற்றி விட்டு, உலோக சிலைகளை வைத்துள்ளனர். இந்த குற்றங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் தான் நடைபெற்று இருக்க வேண்டும்.
புலன் விசாரணை
மாயமான சிலைகள் குறித்து வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை செய்தால் உண்மை வெளிப்படும். கோவில்களுக்கு சேர, சோழ, பாண்டியர் மன்னர்கள் காலத்தில் கோடிக்கணக்கான சொத்துக்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. எனவே இதில் நடைபெறும் தவறுகளை கண்டறிய புலன் விசாரணை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது உலக சிவனடியார் திருக்கூட்டத்தின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் சிவஈஸ்வரன், மாநில நிர்வாக தலைவர் முத்துபாண்டி உள்பட பலர் இருந்தனர்.