சிலைகளை இடம் மாற்றம் செய்ய வேண்டும்

சிலைகளை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை
சிலைகளை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வாலாஜா பஸ் நிலையத்தில் 4 நுழைவு வாயில்கள் உள்ளன. அந்த வழிகளில் பஸ்களை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்கின்றனர். பஸ் நிலையத்தில் இருந்து வேலூர் பஸ் நிறுத்தம் வரை அடுத்தடுத்து கட்சி தலைவர்கள் சிலைகள் உள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்துகளும் நடந்து வருகிறது. வாலாஜா நகராட்சி, தேசிய நெடுஞ்சாலைத்துறை, போலீசார் இணைந்து கட்சி தலைவர்களின் சிலைகளை வாலாஜாவில் உள்ள மகாத்மா காந்தி பூங்காவில் மாற்றி அமைக்க ஏற்பாடு செய்ய ேவண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story






