தடையை மீறி மதுவிற்றால் கடும் நடவடிக்கை


தடையை மீறி மதுவிற்றால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 12 Aug 2023 7:45 PM GMT (Updated: 12 Aug 2023 7:46 PM GMT)

அனைத்து டாஸ்மாக் கடைகளும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சுதந்திர தினத்தன்று மூடப்படுகின்றன. அன்றைய தினம் மதுவிற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் எப்.எல்.1 உரிமம் பெற்ற டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த எப்.எல்.2, எப்.எல்.3ஏ, எப்.எல்.ஏஏ, எப்.எல்.11 உரிமம் பெற்ற அனைத்து டாஸ்மாக் கடைகளும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சுதந்திர தினத்தன்று மூடப்படுகின்றன. அன்றைய தினம் மதுவிற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி யாரேனும் மது விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பூங்கொடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story