மேகதாது அணையை கொண்டுவந்தால் முதல் போராட்டம் என்னுடையதாக இருக்கும்-அண்ணாமலை திட்டவட்டம்


மேகதாது அணையை கொண்டுவந்தால் முதல் போராட்டம் என்னுடையதாக இருக்கும்-அண்ணாமலை திட்டவட்டம்
x

''கர்நாடகாவில் அமையவுள்ள புதிய அரசு மேகதாது அணையை கொண்டுவந்தால் முதல் போராட்டம் என்னுடையதாக இருக்கும்'', என அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னை,

''கர்நாடகாவில் அமையவுள்ள புதிய அரசு மேகதாது அணையை கொண்டுவந்தால் முதல் போராட்டம் என்னுடையதாக இருக்கும்'', என அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்தில் பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகா தேர்தல் முடிவு எதிரொலியாக, திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. அகற்றப்பட்டதாக தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். 2019-ம் ஆண்டு தேர்தலில் ஏன் இதை கூறவில்லை? அல்லது 2018 தேர்தல் முடிந்து 104 எம்.எல்.ஏ.க்கள் இருக்கும்போது ஏன் இதை சொல்லவில்லை? எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியலுக்காக இந்த கருத்தை தெரிவிக்கிறார்அவருக்கு, பா.ஜ.க.வினுடைய வளர்ச்சியை பார்த்து பயம் வந்துவிட்டது

சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் என்னுடைய நண்பர்கள் தான். சித்தராமையா ஆட்சியின்போது நான் எஸ்.பி.யாக இருந்தபொழுது என் மீது அதிக அன்புடன் இருப்பார். அரசியல் ரீதியாக மட்டுமே எங்களிடம் கருத்து வேறுபாடு உள்ளது.

கர்நாடகாவில் யார் ஆட்சி அமைத்தாலும் அது அந்த கட்சியின் முடிவு. அதில் நான் கருத்து சொல்லமுடியாது. ஆனால் நல்ல ஆட்சியை காங்கிரஸ் கொடுக்க வேண்டும். தயவு செய்து தேர்தல் அறிக்கையில் கூறியதைப் போல மேகதாது அணையை கொண்டு வந்து விடாதீர்கள். நீங்கள் மேகதாதுவை கொண்டு வந்தால், அதை எதிர்த்து நடக்கும் முதல் போராட்டம் பா.ஜ.க. சார்பில் என்னுடையதாக இருக்கும்' என்றார்.


Next Story