''என்னை அடித்தால் நான் திருப்பி அடிப்பேன்'' -அண்ணாமலை பேட்டி


என்னை அடித்தால் நான் திருப்பி அடிப்பேன் -அண்ணாமலை பேட்டி
x

‘‘என்னை அடித்தால் நான் திருப்பி அடிப்பேன்’’ என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னை,

சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 307-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி சென்னை தியாகராயநகரில் அவரது உருவப்படத்துக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் என்னை பற்றி தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்ததற்கு நான் பதிலடி கொடுத்துள்ளேன். இதுபோன்ற மிரட்டல்களை கண்டு நான் பயப்படமாட்டேன். தக்க பதிலடி கொடுப்பேன்.

தன்மானமிக்க அரசியல்வாதி

அரசியலில் இல்லாவிட்டால் ஆடு, மாடு மேய்த்து கொண்டு, வயலில் இறங்கி என்னால் வேலை பார்க்க முடியும். வீட்டிற்கு வெளியே கயிற்று கட்டிலை போட்டு படுத்து உறங்க முடியும்.

என்னை அடித்தால் நான் திருப்பி அடிப்பேன். நான் தன்மானமிக்க அரசியல்வாதி. யாருடைய கை, காலையும் பிடித்து நான் இந்த பதவிக்கு வரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story