ஐ.எப்.எஸ். நிதி நிறுவன ஏஜெண்டு வீடு முற்றுகை
நெமிலி அருகே ஐ.எப்.எஸ். நிதி நிறுவன ஏஜெண்டு வீடு முற்றுகையிடப்பட்டது. அப்போது முதலீட்டார்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியை அடுத்த அசநெல்லிகுப்பம் கிராமத்தில் ஆற்றோர தெருவில் வசித்து வருபவர் விஜயகுமார் (வயது 37). இவர் ஐ.எப்.எஸ். நிதி நிறுவனத்தில் ஏஜெண்டாக பணிபுரிந்து வந்தார். மேலும் நெமிலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளவர்களிடம் பணத்தை வசூல் செய்து ஐ.எப்.எஸ். நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஐ.எப்.எஸ். நிதிநிறுவனம் முதலீட்டாளர்களுக்கு ஒழுங்கான முறையில் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதாக பொருளாதார குற்றபிரிவு போலீசாரல் மூடி சீல்வைக்கப்பட்டது.
இதனால் நேற்று ஐ.எப்.எஸ். நிதி நிறுவனத்தில் முதலீடு சய்த 30-க்கும் மேற்பட்டவர்கள், நிதிநிறுவன ஏஜெண்டு் விஜயகுமார் வீட்டின் முன்பு திரண்டு, பணத்தை பெற்றுத்தரக்கோரி முற்றுகையில் ஈடுபட்டனர்.
அப்போது முதலீட்டாளர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சயனபுரம் பாடசாலை தெருவை சேர்ந்த பழனி என்பவரின் மகன் பாண்டியன் (32) தாக்கப்பட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.