ஐ.எப்.எஸ். நிதி நிறுவன ஏஜெண்டின் வீட்டில் போராட்டம்


ஐ.எப்.எஸ். நிதி நிறுவன ஏஜெண்டின் வீட்டில் போராட்டம்
x
தினத்தந்தி 24 Jun 2023 10:29 PM IST (Updated: 25 Jun 2023 5:57 PM IST)
t-max-icont-min-icon

பணத்தை இழந்தவர்கள் ஐ.எப்.எஸ். நிதி நிறுவன ஏஜெண்டின் வீட்டில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை

நெமிலி

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே உள்ள ஆலப்பாக்கம் ரோடு தெருவில் வசித்து வருபவர் விஜயகுமார் (37). இவர் ஐ.எப்.எஸ். நிதி நிறுவனத்தில் துணை ஏஜென்டாக பணிபுரிந்து வந்தார்.

இவர் நெமிலி மற்றும் அதனை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.50 கோடி வசூல் செய்து வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட ஐஎப்எஸ் நிதி நிறுவனத்தில் செலுத்தியுள்ளார்.

ஆனால் ஐ.எப்.எஸ்.நிதி நிறுவன உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை தராமல் தலைமறைவாகினர்.

போலீசார் நடவடிக்கை எடுத்து தலைமறைவான பங்குதாரர்கள் சிலரை கைது செய்யப்பட்டனர்.

நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் தலைமறைவானதால் பணத்தை இழந்தவர்கள் தங்களது டெபாசிட் பணத்தை திரும்ப தரக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் பணம் டெபாசிட் செய்த நெமிலி பகுதியை சேர்ந்த முதலீட்டாளர்கள் பணத்தை திருப்பி தரக்கோரி ஆலபாக்கத்தில் உள்ள துணை ஏஜென்ட் விஜயகுமாரின் வீட்டின் பூட்டை உடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் விஜயகுமார் வீட்டில் உணவு சமைத்து சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு கோஷமிட்டனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த நெமிலி போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

1 More update

Next Story