லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது


லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது
x

பரமத்திவேலூரில் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அதிலிருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான எந்திரங்கள் நாசமாகின.

நாமக்கல்

பரமத்திவேலூர்:

லாரியில் திடீர் தீ

சிவகாசி நாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் அய்யாசாமி. இவரது மகன் மணீஸ்வரன் (வயது 26). லாரி டிரைவர். இவர்‌ பெங்களூருவில் இருந்து சிவகாசிக்கு அட்டை பெட்டிகள் தயார் செய்யும் 3 எந்திரங்களை லாரியில் ஏற்றிக்கொண்டு கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

இந்தநிலையில்‌ பரமத்திவேலூர் பிரிவு சாலை அருகே லாரி வந்து கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை‌ பார்த்த லாரி டிரைவர், கிளீனர் சிவகாசி நாராயணபுரம் சாலையை சேர்ந்த பாண்டி மகன் சபரிநாதன் (22) ஆகிய இருவரும் லாரியில் இருந்து கீழே இறங்கி ஓடி உயிர் தப்பினர். இதைப் பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தண்ணீரை கொண்டு வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

எந்திரங்கள் எரிந்து நாசம்

தொடர்ந்து நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து மேலும் தீ பரவாமல் தடுத்து அணைத்தனர். இருப்பினும் லாரியில் இருந்த சுமார் ‌‌ரூ.5 லட்சம் மதிப்பிலான அட்டை பெட்டிகள் தயார் செய்யும் 3 எந்திரங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின.

லாரியில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி? என்பது குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story