இளையான்குடி மேல்நிலைப்பள்ளி பவள விழா சீமான் பங்கேற்பு


இளையான்குடி மேல்நிலைப்பள்ளி பவள விழா சீமான் பங்கேற்பு
x
தினத்தந்தி 28 July 2023 12:30 AM IST (Updated: 28 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

இளையான்குடி மேல்நிலைப்பள்ளி நடைபெற்ற பவள விழாவில் சீமான் பங்கேற்றார்.

சிவகங்கை

இளையான்குடி

இளையான்குடி மேல்நிலைப்பள்ளியின் 75-ம் ஆண்டு பவள விழா இளையான்குடி முஸ்லிம் கல்விச்சங்கத்தின் தலைவர் கஸ்னவி தலைமையில் நடைபெற்றது. இளையான்குடி மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் முசாபர் அப்துல் ரகுமான், இளையான்குடி பேரூராட்சி தலைவர் நஜுமுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் முகம்மது இல்யாஸ் அனைவரையும் வரவேற்றார்.தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் முகம்மது சார்பாகவும், முன்னாள் மாணவர் மவுலா முகம்மது நாசர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பள்ளியின் 75-ம் ஆண்டு பவள விழா சிறப்பு அழைப்பாளராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தனது பள்ளி கால நினைவுகளை கூறி பள்ளி மாணவ-மாணவிகள் நன்றாக படித்து பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் இப்ராஹிம்ஷா நன்றி கூறினார். அப்துல் ரசாக், காஜா முகைதீன் ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்கள். நிகழ்ச்சியின் 2-வது அமர்வில் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், நகைச்சுவை மன்னன் மதுரை முத்து குழுவினரின் நகைச்சுவை தர்பார் நிகழ்ச்சியும் நடைபெற்றது.


Next Story