80 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு திருக்கடையூர் கோவிலில் இளையராஜா சதாபிஷேகம்


80 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு திருக்கடையூர் கோவிலில் இளையராஜா சதாபிஷேகம்
x

80 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் இளையராஜா சதாபிஷேகம் செய்து வழிபட்டார்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. சிவன், எமனை காலால் எட்டி உதைத்த தலமான இங்கு, பக்தர்கள் தங்கள் ஆயுள் விருத்திக்காக வழிபாடு செய்கிறார்கள்.

இங்கு பக்தர்கள் 'சஷ்டியப்த பூர்த்தி' (அறுபதாம் கல்யாணம்) செய்வது சிறப்பம்சமாகும். மேலும் ஆயுள் விருத்திக்காக உக்ரத சாந்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் செய்யப்படுகின்றன. இதற்காக பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வருகிறார்கள்.

இளையராஜா சதாபிஷேகம்

இந்த நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா நேற்று திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.

அப்போது இளையராஜா தனக்கு 80 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு ஆயுள் விருத்திக்காக சதாபிஷேக ஹோமம் செய்து வழிபாடு நடத்தினார்.

தொடர்ந்து விநாயகர், அமிர்தகடேஸ்வரர், காலசம்ஹாரமூர்த்தி, அபிராமி அம்மன் உள்ளிட்ட சன்னதிகளில் இளையராஜா சாமி தரிசனம் செய்தார்.

இளையராஜாவின் தம்பி கங்கை அமரன், மகள் பவதாரணி, மகன் கார்த்திக்ராஜா, கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி, இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்டோரும் உடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.


Next Story