வாகனங்களில் விதிமீறி நம்பர் பிளேட்: ஒரே நாளில் ரூ.7 லட்சம் வசூல்- போலீசார் அதிரடி
விதிமீறி நம்பர் பிளேட் இருந்த வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம் ஒரே நாளில் ரூ.7 லட்சம் வசூல் செய்யப்பட்டது.
விதிமீறி நம்பர் பிளேட் இருந்த வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம் ஒரே நாளில் ரூ.7 லட்சம் வசூல் செய்யப்பட்டது.
விதிமீறி நம்பர் பிளேட்
அனைத்து வாகனங்களில் விதிமீறி நம்பர் பிளேட் இருந்தால் உடனடியாக அகற்ற வேண்டும், வாகனங்களை பறிமுதல் செய்து அதிகபட்ச அபராதம் விதிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் ஆறுமுகசாமி, கூடுதல் துணை கமிஷனர் திருமலைக்குமார், உதவி கமிஷனர்கள் செல்வின், மாரியப்பன், இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், ரமேஷ்குமார், தங்கமணி, நந்தகுமார், சுரேஷ், கணேஷ்ராம் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் சுமார் 20 இடங்களில் சிறப்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது விதி மீறி பொருத்தப்பட்டிருந்த வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ரூ.7 லட்சம் வசூல்
அதன்படி, நேற்று ஒரே நாளில் மதுரையில் போக்குவரத்து விதிகளை மீறி, வாகன எண் பலகை பொருத்திய 1,050 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதில், மொத்தம் ரூ.7 லட்சம் அபராதம் வசூலாகியதாக போலீசார் தெரிவித்தனர்.