630 மில்லி கிராம் தங்கத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உருவம்
சிதம்பரத்தில் 630 மில்லி கிராம் தங்கத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உருவத்தை பொற்கொல்லர் ஒருவர் வடிவமைத்து அசத்தியுள்ளார்.
கடலூர்
சிதம்பரம்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன். நகை செய்யும் தொழிலாளியான இவர் குறைந்த மில்லி கிராம் தங்கத்தில் தாஜ்மகால், தண்ணீர் குழாய், நடராஜர் கோவில் போன்ற பல்வேறு வடிவங்களை செய்து அசத்தியுள்ளார். அந்தவகையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு கருணாநிதியின் உருவத்தை வெறும் 630 மில்லி கிராம் தங்கத்தில் செய்து பொற்கொல்லர் முத்துக்குமரன் அசத்தியுள்ளார். அதாவது 729 மில்லி கிராம் தங்கத்தில் 3 சென்டி மீட்டர் அகலம், 3 சென்டி மீட்டர் உயரத்தில் கருணாநிதியின் உருவத்தை வடிவமைத்துள்ளார். இதில் 630 மில்லி கிராம் தங்கம் கருணாநிதியின் உருவமும், 99 மில்லி கிராம் தங்கத்தில் கலைஞர் என்ற பெயரை கருப்பு சிவப்பு நிறத்தில் வடிவமைத்துள்ளார். இதனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story