கீழமுடிமண் கிராமத்துக்கு உடனடி பஸ் வசதி


கீழமுடிமண் கிராமத்துக்கு உடனடி பஸ் வசதி
x
தினத்தந்தி 28 Aug 2023 12:15 AM IST (Updated: 28 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாணவர்களின் கோரிக்கையை ஏற்று கீழமுடிமண் கிராமத்துக்கு கலெக்டர் செந்தில்ராஜ் உடனடி பஸ் வசதி செய்து கொடுத்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே உள்ள ஓட்டப்பிடாரம் தாலுகா மேலமுடிமண் கிராமத்தில் இருந்து கீழமுடிமண் கிராமத்துக்கு 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கூடத்துக்கு சென்று படித்து வருகின்றனர். அங்கிருந்து தினமும் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றுதான் படித்து வருகின்றனர். எனவே, எங்களுக்கு பஸ் வசதி செய்து தர வேண்டும் என்று பள்ளி மாணவர்கள் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் உடனடியாக நடவடிக்கை எடுத்த கலெக்டர், அந்த கிராமத்துக்கு பஸ் வசதி ஏற்படுத்தி கொடுத்தார். இதனால் அந்த பகுதி மாணவர்கள் கலெக்டருக்கு நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து அந்த பகுதிக்கு சென்ற பஸ்சுக்கு கிராம மக்கள் மாலை அணிவித்தும், வாழைகன்றுகளை கட்டியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


Related Tags :
Next Story