ஜெயங்கொண்டம் மக்கள் நீதிமன்றத்தில் 129 வழக்குகளுக்கு உடனடி தீர்வு


ஜெயங்கொண்டம் மக்கள் நீதிமன்றத்தில் 129 வழக்குகளுக்கு உடனடி தீர்வு
x

ஜெயங்கொண்டம் மக்கள் நீதிமன்றத்தில் 129 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

அரியலூர்

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின் படி, ஜெயங்கொண்டம் ஒருங்கிணைந்த நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, ஜெயங்கொண்டம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் நேற்று சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. மேலும், இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் ஜெயங்கொண்டம் பகுதியில் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல்மின் திட்டத்திற்காக கையகப்படுத்திய வழக்கில், நிலங்களை அந்தந்த நில உரிமையாளரிடம் ஒப்படைக்கும் விதத்தில் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இந்த மக்கள் நீதிமன்றத்தினை அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் நீதிபதி அழகேசன் முன்னின்று நடத்தினார். மக்கள் நீதிமன்றத்தில் 129 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. இதில், வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த மக்கள் நீதிமன்றத்துக்கான ஏற்பாடுகளை ஜெயங்கொண்டம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் நிர்வாக உதவியாளர் லெபர்ன் வசந்த ஹாசன் செய்திருந்தார்.


Next Story