போலீசார் நடத்திய குறைதீர்க்கும் முகாம்களில் 154 மனுக்களுக்கு உடனடி தீர்வு


போலீசார் நடத்திய குறைதீர்க்கும் முகாம்களில் 154 மனுக்களுக்கு உடனடி தீர்வு
x
தினத்தந்தி 5 Jan 2023 1:15 AM IST (Updated: 5 Jan 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாநகரில் போலீசார் நடத்திய குறைதீர்க்கும் முகாம்களில் 154 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

சேலம்

சேலம் மாநகர காவல்துறை சார்பில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, கொண்டலாம்பட்டி, கன்னங்குறிச்சி, சூரமங்கலம், அம்மாப்பேட்டை, வீராணம் ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று மாநகர காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது. கன்னங்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து அவர்கள் அளித்த புகார் மனுக்களை பெற்றார். பின்னர் அவர் அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

நிகழ்ச்சியில், போலீஸ் துணை கமிஷனர்கள் மாடசாமி, லாவண்யா உள்பட சம்பந்தப்பட்ட உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்து கொண்டனர். சேலம் மாநகரில் நேற்று நடந்த குறைதீர்க்கும் முகாமில் 240 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விசாரணை மேற்கொண்டதில் 154 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டதாகவும், மீதமுள்ள மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story