61 மனுக்களுக்கு உடனடி தீர்வு


61 மனுக்களுக்கு உடனடி தீர்வு
x

கிணத்துக்கடவில் 61 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாசில்தார் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் ஜமாபந்தி நேற்று வரை 3நாட்கள் நடைபெற்றது.

இதில் கிணத்துக்கடவு, வடசித்தூர் கோவில் ஏகபாளையம் ஆகிய பிர்க்கா பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா, நத்தம் பட்டா மாறுதல், பட்டா நகல், முதியோர் உதவித்தொகை, ரேஷன்கார்டு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்களை மாவட்ட வருவாய் அலுவலரும், கலால் துறை இணை ஆணையாளருமான சுபாநந்தினியிடம் மனுக்கள் அளித்தனர்.

கிணத்துக்கடவில் 3 நாட்கள் நடைபெற்ற ஜமாபந்தியில் மொத்தம் 441 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இதில் பட்டா மாறுதல், நத்தம் பட்டா மாறுதல், பட்டா நகல், வாரிசு சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த 61 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து பயனாளிகளிடம் வழங்கப்பட்டது.

மீதி 380 மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.


Next Story