கிராம மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு


கிராம மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு
x
தினத்தந்தி 24 Nov 2022 7:30 PM GMT (Updated: 24 Nov 2022 7:31 PM GMT)

கிராம மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என்று கிருஷ்ணகிரியில் நடந்த வன உரிமைக்குழு கூட்டத்தில் அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி

கிராம மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என்று கிருஷ்ணகிரியில் நடந்த வன உரிமைக்குழு கூட்டத்தில் அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

வன உரிமைக்குழு கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை சார்பாக பழங்குடியினர் மற்றும் பாரம்பரியமாக வனத்தை சார்ந்த, வாழ்வோர்கான மாவட்ட அளவிலான வன உரிமைக்குழு கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கி பேசியதாவது:-

உடனடி நடவடிக்கை

கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதியில் வாழ்கின்ற பழங்குடியின மக்கள் மற்றும் பிற மரபு வழி சார்ந்த வனத்தில் குடியிருப்போர் அடிப்படை ஆதார வசதிகளான இலவச பட்டா, குடிநீர் வசதி, பள்ளிக் கூடங்கள், மருந்தகம் அல்லது மருத்துவமனை, அங்கன்வாடிகள், நியாய விலைக்கடைகள், மின்சாரம், தொலைத்தொடர்பு, குளங்கள், சிறிய நீர்நிலைகள், நீர் அல்லது மழை நீர் சேகரிப்பு அமைப்புகள், சிறுபாசன கால்வாய்கள், மரபு சாரா எரிபொருள் மூலாதாரம் அமைத்தல், திறன் வளர்ப்பு அல்லது வாழ்க்கை தொழில் சார்ந்த பயிற்சி மையங்கள், சாலை வசதி மற்றும் சமுதாய கூடங்கள் ஆகியவற்றை செய்து தர மாவட்ட அளவிலான வன உரிமை குழு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

துறை அலுவலர்களுக்கு...

கோட்ட அளவில் உள்ள அலுவலர்கள் மற்றும் கிராம அளவில் உள்ள குழு உறுப்பினர்களுக்கு கிராமங்களில் அடிப்படை வசதிகளுக்கான மனுக்கள் பெற்று தகுதியான மனுக்களை மாவட்ட அளவிலான குழுக்களுக்கு அனுப்பி வைத்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை அலுவலர்களுக்குஉத்தரவிட்டப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கூறினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சதீஷ்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கனகராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பழனிசாமி, கதிரவன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story