இறக்குமதி வரியை 20 சதவீதம் உயர்த்த வேண்டும்


இறக்குமதி வரியை 20 சதவீதம் உயர்த்த வேண்டும்
x

சமையல் எண்ணெய்க்கான இறக்குமதி வரியை குறைந்தபட்சம் 20 சதவீதமாக உயர்த்த வேண்டுமென சமையல் எண்ணெய் இறக்குமதி வணிக வட்டாரத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

விருதுநகர்


சமையல் எண்ணெய்க்கான இறக்குமதி வரியை குறைந்தபட்சம் 20 சதவீதமாக உயர்த்த வேண்டுமென சமையல் எண்ணெய் இறக்குமதி வணிக வட்டாரத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

விலை குறைந்தது

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:-

மத்திய அரசு நாட்டின் சமையல் எண்ணெய்யின் தேவையை பூர்த்தி செய்ய பாமாயில், சோயாபீன் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. பாமாயில் மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்தும், சோயாபீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் அர்ஜென்டினா, உக்ரைன் போன்ற நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது.

இறக்குமதியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு சமையல் எண்ணெய் இறக்குமதி வரியை வெகுவாக குறைத்தது. மேலும் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்வோருக்கு பல்வேறு சலுகைகளையும் அறிவித்தது. இந்தநிலையில் உலக சந்தையில் சமையல் எண்ணெய்களின் விலை வெகுவாக குறைந்துள்ளது.

எண்ணெய் வித்து

சோயா பீன் எண்ணெய் 31.2 சதவீதமும், சூரியகாந்தி எண்ணெய் 32 சதவீதமும், பாமாயில் 5.7சதவீதமும் விலை குறைந்துள்ளது. அர்ஜென்டினாவில் சோயாபீன் எண்ணெய்யின் விலை 19.5 சதவீதம் குறைந்துள்ளது. சமையல் எண்ணெய்களின் விலை குறைந்துள்ள நிலையில் எண்ணெய் வித்துக்களின் விலையும் குறைந்துள்ளது. இதனால் எண்ணெய் வித்துக்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் எண்ணெய் வித்துக்களை சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டாத நிலை தொடர்கிறது. மத்திய அரசு சமையல் எண்ணெய்க்கான இறக்குமதி வரியை அவ்வப்போது ஆய்வு செய்து சூழ்நிலைக்கேற்றவாறு மாற்றி அமைக்க வேண்டியது அவசியமாகும்.

இறக்குமதி வரி

தற்போதைய நிலையில் சமையல் எண்ணெய்களின் விலை வெகுவாக குறைந்துள்ள நிலையில் எண்ணெய் வித்துக்களின் விலையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மத்திய அரசு சமையல் எண்ணெய்க்கான இறக்குமதி வரியை குறைந்த பட்சம் 20 சதவீதமாவது உயர்த்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story