இந்தி திணிப்பு என்பது புதுச்சேரியிலும், தமிழகத்திலும் எடுபடாது - முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி


இந்தி திணிப்பு என்பது புதுச்சேரியிலும், தமிழகத்திலும் எடுபடாது - முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி
x

இந்தி திணிப்பு என்பது புதுச்சேரியிலும், தமிழகத்திலும் எடுபடாது என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் முன்னாள் முதல்-அமைச்சவர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது, தனி நபர் வருமானம் அதிகரித்துள்ளது, வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது, பண வீக்கம் குறைந்துள்ளது என பல மேடைகளில் பேசி வருகின்றனர். ஆனால், உண்மையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைந்துள்ளது.

பண வீக்கம் அதிகரித்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.82-ஐ தாண்டிவிட்டது. வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் எண்ணிக்கை 22 கோடியாக அதிகரித்துள்ளது. நிலைமை இப்படி இருக்க பிரதமர் உண்மைக்கு புறம்பான தகவலை கூறி பொய் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் 33 சதவீதம் உள்ளனர். இந்தியா பொருளாதார வளர்ச்சி அதலபாதாளத்துக்கு போயுள்ளது.

உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி மொழியை பல்வேறு வகைகளில் மாநிலங்கள் மீது திணித்து வருகிறார். மத்திய அரசின் பணிக்கான தேர்வுகள், மத்திய அரசின் அலுவலகங்கள் ஆகியவற்றில் இந்தி மொழி பேசினால் மட்டுமே வேலை என்று கூறி இந்தி திணிப்பை செய்கிறார்.இதனால் படிப்படியாக மத்திய அரசு இந்தியை திணிக்கும் வேலையில் இறங்கியுள்ளது. ஆனால் இந்தி திணிப்பு என்பது புதுச்சேரியிலும், தமிழகத்திலும் எடுபடாது. எந்தக் காலத்திலும் இந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story