தகுதிச்சான்று இன்றி இயக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல்


தகுதிச்சான்று இன்றி இயக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல்
x

தகுதிச்சான்று இன்றி இயக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி

மணப்பாறை:

மணப்பாறை பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளர் சத்யா திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் மஞ்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றி வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது 3 வேன்களில் தகுதிச் சான்றிதழ் இல்லாததும், சொந்த பயன்பாட்டிற்கான 2 வேன்களை வாடகைக்கு இயக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து 5 வாகனங்களையும் பறிமுதல் செய்து, ரூ.54 ஆயிரம் அபராதம் விதித்தார்.


Next Story