கணவர்-மாமியாருக்கு சிறை தண்டனை


கணவர்-மாமியாருக்கு சிறை தண்டனை
x
தினத்தந்தி 23 Dec 2022 12:15 AM IST (Updated: 23 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவருக்கு 7 ஆண்டுகளும், மாமியாருக்கு ஒரு ஆண்டும் சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

கோயம்புத்தூர்

கோவை

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவருக்கு 7 ஆண்டுகளும், மாமியாருக்கு ஒரு ஆண்டும் சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

காதல் திருமணம்

கோவை கணபதிபுதூரை சேர்ந்த யோகேஸ்வரன் (வயது 28), லேத் பட்டறை நடத்தி வந்தார். இவரும், தேவி(20) என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், யோகேஸ்வரனின் பெற்றோர் அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனினும் கடந்த 19.5.2010 அன்று காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கணவர் வீட்டில் குடியிருந்தபோது தேவியை, அவரது மாமியார் கிருஷ்ணவேனி அடிக்கடி திட்டி வந்தார். உடனே தேவியுடன் வாடகை வீட்டில் யோகேஸ்வரன் குடியேறினார்.

வரதட்சணை கொடுமை

பின்னர் வரதட்சணையாக ரூ.5 லட்சம் வாங்கி வருமாறு கணவரும், மாமியாரும் தேவியை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. கடந்த 21.10.2016 அன்று தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக இந்த தொகையை வாங்கி வருமாறு கொடுமைப்படுத்தியதால் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அனைத்து மகளிர் போலீசார் வரதட்சணை கொடுமை, தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் யோகேஸ்வரன், அவருடைய தாய் கிருஷ்ணவேணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கோவை மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

சிறை தண்டனை

வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினிதேவி குற்றம் சாட்டப்பட்ட யோகேஸ்வரனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,500 அபராதமும் விதித்தார். மேலும் கிருஷ்ணவேணிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் பி.ஜிஷா ஆஜராகி வாதாடினார். தண்டனை விதிக்கப்பட்ட 2 பேரும், கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story