2026-ல் பா.ம.க. ஆட்சி அமைக்கும்; அன்புமணி ராமதாஸ் பேச்சு
2026-ல் பா.ம.க. ஆட்சி அமைக்கும் என்று ஆலோசனை கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு-ஆரணி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ம.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசுகையில், '2026-ல் பா.ம.க. ஆட்சி அமைக்கும். தமிழ்நாட்டில் எல்லா நகரங்களிலும், கிராமங்களிலும் நானே நேரில் வந்து பா.ம.க. கொடியை ஏற்றி வைத்து மக்களை சந்தித்து பேசுவேன்.
இளைஞர்கள் எல்லாம் நம்ம பக்கம் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் ஒன்று திரட்டி உறுப்பினராக சேர்க்க வேண்டும். நம் கட்சியை விட்டு ஒரு சிலர் வெளியே சென்று விட்டாலும், அவர்களும் நம் கட்சிக்காக பாடுபட்டவர்கள். அவர்களை பற்றி நாம் பேசக்கூடாது' என்றார்.
இதில் மாவட்ட செயலாளர்கள் கணேஷ்குமார், வேலாயுதம், பொறுப்பாளர் கி.ஏழுமலை மற்றும் பலா் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story