Normal
"2026-ல் தமிழகத்தில் பாமக ஆட்சி அமையும்" - அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டில் அதிக இளைஞர்கள் உள்ள இயக்கம் பாமக என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
சென்னை,
வரும் 2026 ஆம் ஆண்டில் தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பின்னர், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வரும் அவர், அதன் ஒரு பகுதியாக அமைச்சர் துரைமுருகனை, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், "எங்களின் இலக்கு 2026-ல் தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆட்சி. அதற்காக ஒரு செயல்திட்டத்தை திட்டமிட்டுள்ளோம். இன்று தமிழ்நாட்டில் அதிக இளைஞர்கள் உள்ள இயக்கம் எங்களின் இயக்கம் . அவர்களின் வாக்கு தான் எங்களின் பலம். பாமகவை சிறுமைப்படுத்துவற்காக, திராவிட கட்சிகளின் யுக்தியால் சாதிக் கட்சி அடையாளம் எங்கள் மீது சுமத்தப்பட்டது" என தெரிவித்தார்.
Related Tags :
Next Story