கோவை அடுக்குமாடி குடியிருப்பில் அழகிகள் இருப்பதாக கூறி வாலிபர்களிடம் பணம் மோசடி- இளம் பெண் உள்பட 4 பேர் கைது
கோவை அடுக்குமாடி குடியிருப்பில் அழகிகள் இருப்பதாக கூறி வாலிபர்களிடம் பணம் மோசடி செய்த இளம் பெண் உள்பட 4 பேர் கைதானார்கள்.
கோவை அடுக்குமாடி குடியிருப்பில் அழகிகள் இருப்பதாக கூறி வாலிபர்களிடம் பணம் மோசடி செய்த இளம் பெண் உள்பட 4 பேர் கைதானார்கள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
அடுக்குமாடியில் அழகிகள்
கோவை சவுரிபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்புக்கு சம்பவத்தன்று சில வாலிபர்கள் வந்தனர். அவர்கள் அங்கு இருந்த காவலாளியிடம் தங்களது செல்போனில் உள்ள சில பெண்களின் போட்டோக்களை காட்டினர். பின்னர் அவர்கள் தங்கி இருக்கும் குடியிருப்பை காட்டுங்கள் என கூறியுள்ளனர்.
அதை பார்த்த காவலாளி போட்டோவில் உள்ளவர்கள் யாரும் இங்கு தங்கவில்லை என கூறினார். அந்த வாலிபர்கள் "எங்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் புகைப்படத்தை அனுப்பிய பெண், தான் இங்கே தங்கி இருப்பதாகவும், ஆன்லைன் மூலமாக பணம் அனுப்பினால் ஜாலியாக உல்லாசம் அனுபவிக்கலாம் என கூறியதாகவும், அதனை நம்பி நாங்கள் பணத்தை அனுப்பி வைத்தோம்என்றனர்.
இதுகுறித்து காவலாளி, அடுக்குமாடி குடியிருப்பு மேற்பார்வையாளருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது.
4 பேர் கைது
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் அடுக்குமாடி குடியிருப்பில் அழகிகள் இருப்பதாக கூறி வாலிபர்களிடம் பணம் மோசடி செய்தது தொடர்பாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சுபாஷ் சந்தர் (வயது 24) மற்றும் கோவையை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கன்னியாகுமரியை சேர்ந்தஆர்த்தி (24), கரூரைச் சேர்ந்த குமாரவேல் (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.