திருப்பரங்குன்றம் அருகே குடும்ப தகராறில் சார்ஜர் ஒயரால் கழுத்தை இறுக்கி தொழிலாளியை கொன்ற மனைவி
திருப்பரங்குன்றம் அருகே குடும்ப தகராறில் ஆத்திரம் அடைந்த மனைவி தனது கணவரை செல்போன் சார்ஜர் ஒயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் அருகே குடும்ப தகராறில் ஆத்திரம் அடைந்த மனைவி தனது கணவரை செல்போன் சார்ஜர் ஒயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.
குடும்ப தகராறு
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள கூத்தியார்குண்டு ஆதிதிராவிட காலனியை சேர்ந்தவர் பாக்கியராஜ் மகன் காளிதாஸ் (வயது 34).இவரது மனைவி ஜெயா(26). இவர்கள் 2 பேரும் கப்பலூர் சிட்கோவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்குள் அடிக்கடி குடும்ப சண்டை ஏற்படுவது வழக்கம்.
காளிதாஸ் மனைவி ஜெயாவுடன் சண்டை போட்டுள்ளார். இதனால் ஜெயா தனது குழந்தைகளை அழைத்து கொண்டு பக்கத்து வீட்டு மாடியில் தங்கியுள்ளார். இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் வீட்டை விட்டு வெளியே சென்ற காளிதாஸ் கீழே விழுந்து திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அப்போது வீட்டிற்கு ஜெயா வந்தார்.
கழுத்தை இறுக்கி கொலை
அப்போதும் காளிதாஸ் கோபத்தில் மனைவியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடவே இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயா தனது கணவர் கழுத்தை செல்போன் சார்ஜர் ஒயர் கொண்டு சுற்றி நெரித்துள்ளார். இதில் மூச்சு திணறி காளிதாஸ் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் காளிதாஸ் உடலை மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஜெயாவை கைது செய்து ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.