அந்தியூர் அருகே தீ விபத்தில்3 குடிசைகள் எரிந்து சாம்பல்


அந்தியூர் அருகே தீ விபத்தில்3 குடிசைகள் எரிந்து சாம்பல்
x

அந்தியூர் அருகே தீ விபத்தில் 3 குடிசைகள் எரிந்து சாம்பல் ஆனது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் அருகே தீ விபத்தில் 3 குடிசைகள் எரிந்து சாம்பல் ஆனது.

குடிசைகளில் தீ விபத்து

அந்தியூர் அருகே உள்ள ஒலகடம் நாகிரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் குடிசை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் இவருடைய மகன்கள் வீடு முன்பு விளையாடி கொண்டிருந்தனர்.

அப்போது வீட்டில் இருந்து புகை வருவதை பார்த்து தந்தையிடம் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் குடிசை முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. மளமளவென பரவிய தீ அருகே உள்ள பழனியம்மாள், பச்சமுத்து ஆகியோரது குடிசை வீடுகளிலும் பிடித்து எரிந்தது.

எரிந்து சாம்பல்

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. பின்னர் இதுபற்றி அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று குடிசைகளின் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் 3 குடிசைகளிலும் இருந்த டி.வி., உணவு பொருட்கள், துணிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது. மேலும் இதுபற்றி வெள்ளித்திருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி வழக்கு பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story