ஒரே நாளில் 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


ஒரே நாளில் 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 2 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-03T00:15:19+05:30)

தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தென்காசி

தென்காசி மாவட்டம் புளியங்குடி போலீஸ் நிலையத்தில் உள்ள கொலை வழக்கில் குற்றவாளிகளான குருவையா (வயது 40), சின்ன மாரியப்பன் (36), செங்கோட்டை போலீஸ் நிலையத்தில் உள்ள அடிதடி, கொலை முயற்சி, கொள்ளை போன்ற வழக்கில் குற்றவாளியான சுபாஷ் கண்ணன் (24), சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் உள்ள போக்சோ வழக்கில் குற்றவாளியான ரகு (37), ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் உள்ள கஞ்சா வழக்கில் குற்றவாளியான ராசு என்ற செல்வராஜ் (34) ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதனை கலெக்டர் ஆகாஷ் ஏற்று, 5 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அந்த உத்தரவை அந்தந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தனர்.Next Story