கருத்து வேறுபாட்டால் பிரிந்த நிலையில்நகைகளை தர மறுப்பதாக பெண் புகார்:கணவர் உள்பட 8 பேர் மீது வழக்கு


கருத்து வேறுபாட்டால் பிரிந்த நிலையில்நகைகளை தர மறுப்பதாக பெண் புகார்:கணவர் உள்பட 8 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 26 Dec 2022 6:45 PM GMT (Updated: 26 Dec 2022 6:45 PM GMT)

கருத்து வேறுபாட்டால் பிரிந்த நிலையில் நகைகளை தர கணவர் குடும்பத்தினர் மறுப்பதாக பெண் புகார் கொடுத்தார்.

தேனி

போடி மீனாட்சிபுரத்தை சேர்ந்த சங்கிலி மகள் வைதேகி (வயது 32). இவர் தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், "எனக்கும், தேனி அருகே முத்துத்தேவன்பட்டியை சேர்ந்த புதியவன் மகன் ரவி (43) என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக நானும், எனது கணவரும் 3 ஆண்டாக பிரிந்து வாழ்கிறோம். எனது கணவர் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அது தள்ளுபடி ஆகிவிட்டது. எனது கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினர் எனது நகைகளை வாங்கி வைத்துக் கொண்டு திரும்பித் தர மறுக்கின்றனர்" என்று கூறியிருந்தார். அதன்பேரில், அவருடைய கணவர் ரவி, மாமனார் புதியவன் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story