கல் உடைக்கும் எந்திரத்தில்கை சிக்கியதால் ஆபரேட்டர் சாவுகெங்கவல்லி அருகே சோகம்


கல் உடைக்கும் எந்திரத்தில்கை சிக்கியதால் ஆபரேட்டர் சாவுகெங்கவல்லி அருகே சோகம்
x

கெங்கவல்லி அருகே கல் உடைக்கும் எந்திரத்தில் கை சிக்கியதால் ஆபரேட்டர் இறந்தார்.

சேலம்

கெங்கவல்லி,

ஆபரேட்டர்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கடம்பூர் பெரியசாமி கோவில் பகுதியில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மணி (வயது 55) என்பவருக்கு சொந்தமான கிரசர் உள்ளது. இந்த கிரசரில் கடம்பூர் நடுவீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (47) என்பவர் கல் உடைக்கும் எந்திர ஆபரேட்டராக இருந்தார்.

இந்த கிரசரில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் ராஜேந்திரன் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கல் உடைக்கும் எந்திரத்தில் ராஜேந்திரன் கை சிக்கியதாக தெரிகிறது. ராஜேந்திரனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த தொழிலாளர்கள் ஓடி வந்தனர்.

ஆஸ்பத்திரியில் சாவு

அங்கு கிரசர் எந்திரத்தில் சிக்கி ராஜேந்திரனின் கை சிதைந்து காணப்பட்டது. அவரை ஆத்தூரில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இறந்த ராஜேந்திரனுக்கு வெண்ணிலா (37) என்ற மனைவியும், லட்சுமி (14), காயத்ரி (13) ஆகிய 2 மகள்களும், ஈஸ்வரன் (8) என்ற மகனும் உள்ளனர். கிரசர் எந்திரத்தில் கை சிக்கி ஆபரேட்டர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story