என்.எல்.சி.யால் நிலம் கையகப்படுத்தியதில் கூடுதல் இழப்பீடு பெறாதவர்களுக்கு கருணைத்தொகை உயர்த்தி வழங்க வேண்டும்; கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு


என்.எல்.சி.யால் நிலம் கையகப்படுத்தியதில்       கூடுதல் இழப்பீடு பெறாதவர்களுக்கு கருணைத்தொகை உயர்த்தி வழங்க வேண்டும்;       கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 19 Sep 2023 6:45 PM GMT (Updated: 19 Sep 2023 6:47 PM GMT)

என்.எல்.சி.யால் நிலம் கையகப்படுத்தியதில் கூடுதல் இழப்பீடு பெறாதவர்களுக்கு கருணைத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

கடலூர்


விருத்தாசலம் அருகே உள்ள மும்முடிசோழகன் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

மும்முடிசோழகன் கிராமத்தில் கடந்த 2000 முதல் 2007-ம் ஆண்டு வரை என்.எல்.சி.யால் நில எடுப்பு செய்த வீட்டுமனைகளுக்கு புதிய சட்டத்தின் படி இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். மாற்று மனையில் புதிய வீடு கட்டி கொடுத்துவிட்டு, பிறகு வீடு மனைகளை கையகப்படுத்த வேண்டும். தற்போது வசிக்கும் வீட்டு மனைகளை எடுக்கும் வரை, எங்கள் நிலங்களை சமன் செய்வதோ, நீர் பாசனத்தை நிறுத்துவதோ தடை செய்யக்கூடாது. 2000-ம் ஆண்டு முதல் கூடுதல் இழப்பீட்டுத் தொகை பெறாத விவசாயிகளுக்கு கருணைத்தொகை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். எங்கள் கிராம மக்களுக்கு குடும்பத்திற்கு மாற்று மனையாக 10 சென்ட் மனையும், இரண்டு ஏக்கர் நிலமும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.


Next Story