வேளாண்மை விரிவாக்க மையங்களில்பணமில்லா பரிவர்த்தனை


வேளாண்மை விரிவாக்க மையங்களில்பணமில்லா பரிவர்த்தனை
x

மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்று மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சேகர் கூறினார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை;

மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்று மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சேகர் கூறினார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது

பணமில்லா பரிவர்த்தனை

தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் சட்டசபையில் தாக்கல் செய்த 2022-2023-ம் ஆண்டுக்கான வேளாண்மை நிதி நிலை அறிக்கையில், வேளாண்மை விரிவாக்க மையங்களில் புதிய மின்னணு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பணமில்லா பரிவர்த்தனை முறை செயல்படுத்தப்படும் என அறிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இடுபொருட்களை பெறும்போது தங்களது பங்களிப்பு தொகையை இ-செலான், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை (யு.பி.ஐ.) மூலம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.இந்த திட்டம் முதல் கட்டமாக சென்னை தவிர அனைத்து மாவட்டங்களிலும், மாவட்டத்திற்கு ஒரு வட்டாரத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல் கட்டமாகமயிலாடுதுறை வட்டாரத்தில் உள்ள பிரதான வேளாண்மை விரிவாக்க மையத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறை செயல்படுத்தப்பட்டது.

சீர்காழி- கொள்ளிடம்

தற்போது இந்த பணமில்லா பரிவர்த்தனை முறை மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பிற வட்டாரங்களான குத்தாலம், சீர்காழி, கொள்ளிடம் மற்றும் செம்பனார்கோயில் வட்டாரங்களில் உள்ள பிரதான வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.இப்பணியினை முறைப்படுத்த வேளாண்மை விரிவாக்க மைய பணியாளர்கள் அனைவருக்கும் பணமில்லா பரிவர்த்தனை முறையை செயல்படுத்துவதற்கான பயிற்சி வழங்கப்பட்டு, விற்பனை இட கருவிகள் அல்லது ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும்.

பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் செயல்படுத்தப்படும் இந்த பணமில்லா பரிவர்த்தனை நடைமுறைகளை மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயன்படுத்தி பயனடைய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story