அல்லிநகரத்தில்பெண்ணை உளியால் குத்திய மாமனார் கைது
அல்லிநகரத்தில் பெண்ணை உளியால் குத்திய மாமனாரை போலீசார் கைது செய்தனர்.
தேனி
தேனி அல்லிநகரம் வெங்களா நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 65). இவரது மகன் சரவணன். தந்தை-மகன் இருவருக்கும் இடையே வீடு ஒத்திக்கு வாங்கியதில் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் சரவணன் மனைவி நாகஜோதி (40) சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை பாலசுப்பிரமணியன் வழிமறித்தார். பின்னர் அவர் பணத்தை தர மாட்டாயா என்று கேட்டு தான் வைத்திருந்த உளியால் நாகஜோதியை வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த நாகஜோதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அல்லிநகரம் போலீசில் சரவணன் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பையன் வழக்குப்பதிந்து பாலசுப்பிரமணியனை கைது செய்தார்.
Related Tags :
Next Story