அம்மன் புரத்தில் வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினம் அனுசரிப்பு


அம்மன் புரத்தில்  வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினம் அனுசரிப்பு
x
தினத்தந்தி 27 Sept 2022 12:15 AM IST (Updated: 27 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

அம்மன் புரத்தில் திங்கட்கிழமை வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே அம்மன்புரத்தில் வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினம்

அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனர் என்.வெங்கடேஷ் பண்ணையாரின் 19-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, திருச்செந்தூர் அருகே அம்மன்புரத்தில் உள்ள வெங்கடேஷ் பண்ணையார் நினைவிடத்தில் அவரது குடும்பத்தின் சார்பில் பொங்கல் வைத்து, படையல் படைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் விளக்கு பூஜையும் நடந்தது.

இதில் அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை தலைவரும், பனங்காட்டு மக்கள் கழக நிறுவனருமான எஸ்.ஏ.சுபாஷ் பண்ணையார், என்.வெங்கடேஷ் பண்ணையாரின் மனைவியும், முன்னாள் மத்திய மந்திரியுமான ராதிகாசெல்வி, ராதிகா செல்வியின் தாயார் தங்கதாய் அம்மாள், தம்பி குமரன், ஆத்திக்கன் பண்ணையார், ராம்குமார் பண்ணையார், வெங்கடேஷ் பண்ணையார் சகோதரி ஜானகி, அவரது கணவர் மாவடி மகாலிங்கம், அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை மாநில துணைத்தலைவர் சிவ செல்வராஜ், பனங்காட்டு மக்கள் கழக மாவட்ட செயலாளர் ஓடை செல்வம், மூலக்கரை என்.வெங்கடேஷ் பண்ணையார் நற்பணி இயக்க மாநில செயலாளர் சொர்ணவேல்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பொதுமக்கள், அரசியல் கட்சியினர், வியாபாரிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்.வெங்கடேஷ் பண்ணையார் நினைவிடத்தில் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் எம்.கே.விஷ்ணு பிரசாத் எம்.பி., அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் எஸ்.ஏ.சுபாஷ் பண்ணையார், பெருந்தலைவர் காமராஜர் பேத்தியும், மாநில காங்கிரஸ் கமிட்டி செயலாளருமான கமலிகா காமராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில், சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் கே.வேலாயுதராஜா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயலாளர் வக்கீல் மகேந்திரன், வக்கீல் ஆழ்வார்தோப்பு எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகநேரி நகர காங்கிரஸ் தலைவர் ராஜாமணி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தி.மு.க.

தி.மு.க. சார்பில் சபாநாயகர் அப்பாவு மகன் அலெக்ஸ், மாநில இளைஞரணி துணை செயலாளர் ஜோயல், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து துணை தலைவர் கல்யாணசுந்தரம், நகர செயலாளர் நவநீதபாண்டியன், மாவட்ட தி.மு.க. முன்னாள் விவசாய அணி அமைப்பாளர் காளிதாஸ் பண்ணையார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பா.ஜ.க. மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க.

அ.தி.மு.க. சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வணிகர் சங்கம்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், தெற்கு மாவட்ட தலைவர் காமராசு நாடார், மாவட்ட துணை தலைவர் யாபேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காயல்பட்டினம் ஐக்கிய வியாபாரிகள் சங்க தலைவர் அப்துல்காதர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஏரல் அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் ஆர்.ரவிசங்கர், ஆறுமுகநேரி ஐக்கிய வியாபாரிகள் சங்க தலைவர் தாமோதரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தட்சணமாற நாடார் சங்கம்

நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார், செயலாளர் ராஜ்குமார் நாடார், பொருளாளர் செல்வராஜ் நாடார், மும்பை தட்சணமாற நாடார் சங்க தலைவர் காசிலிங்க நாடார், இயக்குனர் கோபால் ராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஆத்தூர் சுற்றுவட்டார நாடார் உறவின்முறை சங்க தலைவர் செல்வராஜ், செயலாளர் காமராஜ், பொருளாளர் கோட்டாளம் முத்து மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நெல்லை-தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலன சங்க தலைவர் பத்மநாபன், நாடார் மகாஜன சங்க பொது செயலாளர் கரிக்கோல்ராஜ் ஆகியோர் மாலை அணிவித்தனர்.

அ.ம.மு.க.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக அமைப்பு செயலாளர் குமரேசன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.மனோகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் ஐஜினஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட துணை செயலாளர் மீனாட்சி சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநில பொருளாளர் திலகபாமா தலைமையிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மண்டல செயலாளர் தமிழினியன் தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஏரல் சேர்மன் கோவில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டி நாடார், இந்து மகாசபா தலைவர் பாலசுப்பிரமணியன், மாநில வக்கீல் அணி தலைவர் எஸ்.பி.சிலுவை நாடார், ஆத்தூர் சிற்பி ஆர்.எஸ்.ஸ்ரீதர், சென்னை தொழில் அதிபர் சீனிவாசன், ஆதவா தொண்டு நிறுவன நிறுவனர் பாலகுமரேசன், சென்னை தொழில் அதிபர் சீனிவாசன், சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ்,

தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற திருச்செந்தூர் ஒன்றிய அமைப்பாளர் சண்முகவேல் நாடார், பனங்காட்டு மக்கள் கழக ராஜபாளையம் ஒன்றிய செயலாளர் ஆனந்தகுமார், ஒன்றிய அவை தலைவர் தங்கராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திருச்செந்தூர் யாதவர் இளைஞர் அணி மற்றும் புதிய மக்கள் தமிழ் தேசம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பண்ணையார் ரதம்

வெங்கடேச பண்ணையார் நற்பணி இயக்கம் சார்பில் வெங்கடேஷ் பண்ணையாரின் ரதம் மூலக்கரையில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக அம்மன்புரத்தில் உள்ள அவரது நினைவிடத்திற்கு வந்தது. அங்கு பனங்காட்டு மக்கள் கழக தெற்கு மாவட்ட செயலாளர் ஓடை செல்வம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், நற்பணி இயக்க ஆறுமுகநேரி நகர தலைவர் இசக்கிமுத்து, நிர்வாகிகள் ராஜேஷ், வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடையடைப்பு

என்.வெங்கடேஷ் பண்ணையாரின் நினைவு தினத்தை முன்னிட்டு ஆறுமுகநேரி மற்றும் தெற்கு ஆத்தூரில் நேற்று கடையடைப்பு செய்யப்பட்டது.


Next Story