எருமப்பட்டி அருகே விபத்தில் முதியவர் பலி
எருமப்பட்டி அருகே விபத்தில் முதியவர் பலியானார்.
எருமப்பட்டி
திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா வாளசிராமணியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 60). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் (47) என்பவரும் தனது சொந்த வேலை காரணமாக வரகூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் வேலை முடிந்து விட்டு மீண்டும் வாளசிராமணிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது கஞ்சம்பட்டி ரோடு கிரசர் அருகே எதிரே வந்த வரகூரை சேர்ந்த லட்சுமணன் மகன் தீபக் (26) என்பவரது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக கிருஷ்ணன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கனகராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது பற்றி எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.