அந்தியூரில் ரூ.4 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
அந்தியூரில் ரூ.4 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம் போனது.
அந்தியூர்
அந்தியூர் புதுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெற்றது. இதற்கு அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், கள்ளிப்பட்டி, எண்ணமங்கலம், கோவிலூர், வட்டக்காடு, வெள்ளிதிருப்பூர், வேம்பத்தி, வெள்ளாளபாளையம், கீழ்வானி, மூங்கில்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்து 157 வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.
இதில் கதலி (கிலோ) ரூ.40-க்கும், நேந்திரம் ரூ.42-க்கும், பூவன் (தார்) ரூ.560-க்கும், ரஸ்தாளி ரூ.620-க்கும், செவ்வாழை ரூ.850-க்கும், தேன்வாழை ரூ.500-க்கும், மொந்தன் ரூ.420-க்கும், ரோபஸ்டா ரூ.320-க்கும் விற்பனையானது. வாழைத்தார்கள் மொத்தம் ரூ.3 லட்சத்து 97 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
ஈரோடு, திருப்பூர், மேட்டுப்பாளையம், கோவை, மேட்டூர் மற்றும் கர்நாடகா, கேரளா போன்ற வெளிமாநில பகுதியில் இருந்தும் வியாபாரிகள் இங்கு வந்து வாழைத்தார்களை வாங்கி சென்றனர்.