அந்தியூரில் ரூ.3½ லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை


அந்தியூரில்  ரூ.3½ லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை
x

அந்தியூரில் ரூ.3½ லட்சத்துக்கு வெற்றிலை விற்பனையானது.

ஈரோடு

அந்தியூா்

அந்தியூர் வாரச்சந்தையில் வெற்றிலை விற்பனை நடைபெற்றது. இந்த சந்தைக்கு அந்தியூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் வெற்றிலைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். 100 வெற்றிலைகளை கொண்டது ஒரு கட்டு ஆகும். ராசி வெற்றிலை கட்டு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.60-க்கும் அதிகபட்ச விலையாக ரூ.80-க்கும், பீடா வெற்றிலை குறைந்தபட்ச விலையாக ரூ.40-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.50-க்கும் விற்பனை ஆனது. வெற்றிலை மொத்தம் ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு ஏலம் போனது.


Related Tags :
Next Story