அந்தியூரில் சாலையோர பள்ளத்துக்குள் இறங்கிய பஸ்


அந்தியூரில்  சாலையோர பள்ளத்துக்குள் இறங்கிய பஸ்
x

பஸ்

ஈரோடு

அந்தியூரை அடுத்த கரட்டுப்பாளையத்தில் குடிநீர் குழாய் பதிக்க சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டு மூடப்பட்டு விட்டது. இந்த நிலையில் பெருமாபாளையத்தில் இருந்து அந்தியூர் நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. கரட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே சென்றபோது எதிேர வரும் லாரிக்கு வழி விடுவதற்காக பக்கவாட்டில் பஸ்சை அதன் டிரைவர் இறக்கினார். அப்போது குடிநீர் குழாய் பதிக்கப்பட்ட சாலையோர பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக பஸ் இறங்கியது. இதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரம் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு 30 நிமிடங்களில் அந்த டவுன் பஸ் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story