ஆரைக்குளம் பஞ்சாயத்தில் ரூ.54 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்


ஆரைக்குளம் பஞ்சாயத்தில் ரூ.54 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 14 Sep 2023 6:45 PM GMT (Updated: 14 Sep 2023 6:46 PM GMT)

ஆரைக்குளம் பஞ்சாயத்தில் ரூ.54 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் தாலுகா ஆரைக்குளம் பஞ்சாயத்து அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் தெற்கு ஆரைகுளம் கிராமத்தில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் கழிபறை, வாறுகால் மற்றும் கதிரடிக்கும் களம், குறுக்கன்குளம் குளம் மடை கட்டுதல் ஆகிய வளர்ச்சி திட்ட பணிகள், வடக்குஆரைக்குளம் கிராமத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலைகள் அமைக்கும் பணி அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவுக்கு பஞ்சாயத்து தலைவர் சங்கர் செல்வம் முன்னிலை வைத்தார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆரைக்குளம் பஞ்சாயத்தில் ரூ.54 லட்சம் செலவில் திட்ட பணிகளுக்கு எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து புதியம்புத்தூர் பஞ்சாயத்து தெற்கு காலனியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஓட்டப்பிடராம் தாசில்தார் சுரேஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இமாம், வருவாய் ஆய்வாளர் வசந்தகுமார், பஞ்சாயத்து தலைவர்கள் பழனிச்செல்வி, அருண்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story