அரூரில், ஆடி மாத பிறப்பையொட்டி தேங்காய் சுட்டு மகிழ்ந்த மக்கள்


அரூரில், ஆடி மாத பிறப்பையொட்டி தேங்காய் சுட்டு மகிழ்ந்த மக்கள்
x

அரூரில், ஆடி மாத பிறப்பையொட்டி தேங்காய் சுட்டு பொதுமக்கள் மகிழ்ந்தனர்.

தர்மபுரி

அரூர்:

ஆடி மாதம் வந்தாலே பண்டிகைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் அதற்கு ஆடி மாத பிறப்பே முதலாவதாக அமைகிறது. அன்றைய தினம் புதிதாக திருமணம் முடித்த மாப்பிள்ளை பெண்ணை பிறந்த வீட்டிற்கு அழைத்து வந்து புத்தாடை கொடுப்பர். ஆடி மாதம் முதல் நாள் தேங்காய் சுடும் வழக்கம் தமிழர்களிடையே உள்ளது. வறுகடலை, பாசிப்பயிறு, அவல், எள், வெல்லம் கலந்து தேங்காயில் நிரப்பி தீயில் இட்டு பின்னர் அதை உண்பர். அரூரில் ஆடி பிறப்பை ஒட்டி குழந்தைகள் ஆர்வத்துடன் தேங்காய் சுட்டு மகிழ்ந்தனர். அதே போல் அரூரில் அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.


Next Story