பர்கூர் வனப்பகுதியில் மரத்தில் தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை


பர்கூர் வனப்பகுதியில் மரத்தில் தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 24 Sept 2023 3:45 AM IST (Updated: 24 Sept 2023 3:56 AM IST)
t-max-icont-min-icon

பர்கூர் வனப்பகுதியில் மரத்தில் தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை செய்துகொண்டாா்.

ஈரோடு

அந்தியூா்

அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் ஆலயங்கரடு பகுதியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 73). உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த அவர், அதற்கான சிகிச்சையும் எடுத்து வந்தார். இந்தநிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற பொன்னுச்சாமி அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பொன்னுச்சாமியின் மகன் பழனிச்சாமி பல இடங்களில் தந்தையை தேடிப்பார்த்தார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில் பர்கூர் வனப்பகுதிக்கு உள்பட்ட வரட்டுமலை என்ற இடத்தில் ஒரு மரத்தில் கயிறு கட்டி தூக்குப்போட்டு பொன்னுச்சாமி பிணமாக தொங்கினார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பர்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பொன்னுச்சாமி தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story