பவானியில் பல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பவானியில் பல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினா்
ஈரோடு
பவானியில் இந்தியா கூட்டணி என்ற கட்சியின் சார்பில், இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீன நாட்டின் காசா பகுதியில் அப்பாவி மக்களை கொன்று குவிப்பதை தடுத்து நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பவானி நகர செயலாளர் ப.சி.நாகராஜன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் வக்கீல் பாலமுருகன், மாவட்ட வர்த்தக அணி தலைவர் சுப்பிரமணி, வர்த்தக அணி துணை அமைப்பாளர் தவமணி, மாவட்ட பிரதிநிதி ராஜசேகர், நகர மன்ற உறுப்பினர்கள் பாரதி, ரவி, கவிதா உதயசூரியன், சுமதி கணேசன், சாரதா சுரேஷ் உள்பட பவானி நகர காங்கிரஸ் கமிட்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழ் புலிகள் அமைப்பு, திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்பினர், அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






