விவசாயி வீட்டில் பட்டப்பகலில் 16½ பவுன் நகை கொள்ளை


விவசாயி வீட்டில் பட்டப்பகலில் 16½ பவுன் நகை கொள்ளை
x

நாங்குநேரி அருகே, பட்டப்பகலில் விவசாயி வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் 16½ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

திருநெல்வேலி

நாங்குநேரி அருகே, பட்டப்பகலில் விவசாயி வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் 16½ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

விவசாயி

நெல்லை-நாகர்கோவில் நாற்கர சாலையில் நாங்குநேரி அருகே மூன்றடைப்பு கோவைகுளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பையா (வயது 41), விவசாயி.

இவர் நேற்று முன்தினம் வாழை இலை வியாபாரம் சம்பந்தமாக நெல்லையில் உள்ள சந்தைக்கு சென்று இருந்தார். அப்போது அவரது மனைவி கிருஷ்ணவேணி வீட்டின் முன் பக்க கதவை பூட்டி விட்டு, பக்கத்து வீட்டுக்கு சென்றார்.

நகைகள் கொள்ளை

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அங்கு வந்து சுப்பையா வீட்டின் கதவை திறந்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் பீரோவில் இருந்த 16 பவுன் 5 கிராம் எடையுள்ள தங்க நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

சிறிது நேரத்திற்கு பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்த கிருஷ்ணவேணி கதவு திறந்து கிடந்ததை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்றார். அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள் கொள்ளை போனதை அறிந்து திடுக்கிட்டார்.

தடயம் சேகரிப்பு

உடனே அவர் தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார். அவரும் விரைந்து வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி சுப்பையா மூன்றடைப்பு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினர்.

சுப்பையா வீட்டில் யாரும் இல்லாததை மர்ம நபர்கள் நோட்டமிட்டு இந்த துணிகர செயலில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த துணிகர சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story